பிக்பாஸ் நாமினேஷனில் திடீர் திருப்பம்: காயினை பயன்படுத்த அனுமதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடைபெற்றது என்பதும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இரண்டு சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்தார்கள் என்பது குறித்த முதல் புரமோவை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டாவது புரமோவில் நாமினேசன் செய்யப்பட்டவர்கள் விவரத்தை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற தேர்வானவர்கள் என பாவனி ரெட்டி, இசைவாணி, அபிநய், இமான் அண்ணாச்சி, வருண் மற்றும் பிரியங்கா என அறிவிக்கின்றார். பிரியங்கா தனது பெயரை அறிவித்த உடன் அப்செட் ஆனது அவரது முகத்தில் இருந்து தெரிய வருகிறது.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக ’உங்கள் வசம் உள்ள நாணயத்தின் சலுகையை பயன்படுத்தி உங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரு நபரை தேர்வு செய்து உங்களுக்கு பதிலாக அவரை நாமினேட் செய்யலாம்’ என பிக்பாஸ் அறிவிக்கிறார். இதனை அடுத்து நாணயத்தை கையில் வைத்திருக்கும் இசைவாணி, பாவனி ரெட்டி மற்றும் வருண் ஆகியோர் தங்களை காப்பாற்றிக் கொண்டு, வேறு யாரையாவது நாமினேட் செய்வார்களா? என்பதை அடுத்து வரும் புரமோ அல்லது இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.