இந்த வார நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார்? 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வித்தியாசமான நாமினேஷன் பிராசஸ் நடந்தது என்பதையும் ஒவ்வொரு போட்டியாளரும் எந்த போட்டியாளர்களை காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து இருவரை குறிப்பிட வேண்டும் என்றும் பிக்பாஸ் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் இரண்டு போட்டியாளர்களை காப்பாற்றலாம் என்று அறிவித்ததை அடுத்து காப்பாற்றப்படாத போட்டியாளர்கள் நாமினேஷன் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நாமினேஷன் பிராசஸ் முடிந்ததும் இந்த வாரம் நாமினேஷனில் உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்து பிக்பாஸ் அறிவித்தார். அவர்கள் சிபி, இசைவாணி, மதுமிதா, ஐக்கி, ஸ்ருதி, நிரூப் , அக்சரா , அபினய் மற்றும் பாவனி ஆகிய ஒன்பது பேர்கள் இந்த வார நாமினேஷனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் ஒருவர் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்படவுள்ள நிலையில் அவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்போம்.

இந்த நிலையில் நாமினேஷனில் சிக்கிய இசைவாணி, பாவனி, நிரூப் மற்றும் ஸ்ருதி ஆகியோர் தங்களிடம் உள்ள காயினை பயன்படுத்தவில்லை என்று கூறியதால் நாமினேஷனில் எந்தவித மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆன்மீகப் பயணம் சென்றுள்ள இளம் நடிகைகள்… கவனம் ஈர்க்கும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் இளம் வயதிலேயே நம்பிக்கை நட்சத்திரமாக  மாறியிருப்பவர் நடிகை சாரா அலிகான். காதலை

ஆளுமை சக்தி கொண்டு ஆட்டம் போடும் நிரூப்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களின் காயின்கள் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் இந்த காயின்கள் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் கூடுதல் சக்திகள் அளிக்கப்படும் என்றும் பிக்பாஸ் அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

'ஜகமே தந்திரம்' நடிகரின் காரை அடித்து நொறுக்கிய காங்கிரஸார்: பெரும் பரபரப்பு!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவரின் காரை காங்கிரஸ் கட்சியினர் நடுரோட்டில் அடித்து நொறுக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எவர்கிரீன் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

பாலிவுட் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும்

புனித் ராஜ்குமார் ஆத்மா சாந்தியடைய இசைஞானி செய்த செயல்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய