இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இதுவரை நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் பாவனி, இமான், அபினய், சிபி, தாமரை, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் அக்சரா என்ற நிலையில் இவர்களில் ஒருவர் ஞாயிறன்று வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது இசைவாணி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக இசைவாணி பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்கு இன்று அபிஷேக் ராஜா ரீஎண்ட்ரி ஆன நிலையில் நாளை மறுநாள் இசைவாணி வெளியே செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.