இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுபவர் இவர்தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் செய்யப்பட்டவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் ஞாயிறு அன்று வெளியேற்றப்படுவார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இதுவரை நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, ஸ்ருதி மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் பாவனி, இமான், அபினய், சிபி, தாமரை, இசைவாணி, ஐக்கி பெர்ரி, நிரூப் மற்றும் அக்சரா என்ற நிலையில் இவர்களில் ஒருவர் ஞாயிறன்று வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவது இசைவாணி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக இசைவாணி பார்வையாளர்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டிற்கு இன்று அபிஷேக் ராஜா ரீஎண்ட்ரி ஆன நிலையில் நாளை மறுநாள் இசைவாணி வெளியே செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 'மாநாடு' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக

சூர்யா படத்தில் சிவகார்த்திகேயன்: ரசிகர்கள் உற்சாகம்!

சூர்யாவின் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்டால் ஒரு லட்சம் மணியார்டர்: சூர்யாவுக்கு பாமக பிரமுகர் அறிவிப்பு!

'ஜெய்பீம்' திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் அனுப்பப்படும்

வர்றேன், திரும்ப வர்றேன்: சிம்புவின் 'மாநாடு' டிரைலர்

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

செல்லக்கிளியுடன் தல தோனி… இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி, பண்ணை விவசாயம் மற்றும் இயற்கை மீது அதிக