நிஷா இன்னும் கேம் பண்ணவே இல்லை: நிஷா கணவர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெள்ளேந்தியாக இருக்கும் ஒரு போட்டியாளர் என்றால் அது நிஷா மட்டுமே என்பதுதான் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. எதை சொன்னாலும் நம்பிவிடுவது, அதிகமாக எமோஷன் ஆவது, பாசத்திற்கு சற்று அதிகமாகவே கட்டுப்படுவது ஆகியவை நிஷாவின் வீக்னெஸ் ஆகவுள்ளது.
இந்த நிலையில் நிஷாவின் கணவர் ரியாஸ் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ‘என்னை பொருத்தவரை நிஷா இன்னும் விளையாட்டை ஆரம்பிக்கவே இல்லை என்று கூறினார். ரியோவுக்காக காத்திருந்து சாப்பிடுவதில் எல்லாம் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் நமக்கு பசித்தால் நாம் சாப்பிட வேண்டியதானே’ என்றும் அவர் கூறினார்.
மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு அவர் போகும்போது எனக்கும் நிஷாவுக்கும் பிடித்த பிங்க் கலர் நைட்டியை நான் தான் அவருக்கு தெரியாமல் சூட்கேஸில் வைத்தேன் என்றும், நைட்டி வேண்டாம் என்று தான் நிஷா கூறினார் என்றும் ரியாஸ் கூறினார்.
மேலும் நிஷாவின் பாசம் போலி என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும், அவர் உண்மையாகவே எல்லோரிடமும் பாசத்தை பொழிவார் என்றும் கூறிய ரியாஸ், பிக்பாஸ் வீட்டில் ரியோ மட்டும் தான் அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் தம்பி என்ற முறையில் அவரிடம் பாசம் காட்டுவதாகவும், ஆனால் அவர் தன்னுடைய விளையாட்டை சரியாகத்தான் விளையாடுகிறார் என்றும் ரியாஸ் கூறினார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com