close
Choose your channels

கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் மும்தாஜ்: வைரல் வீடியோ

Thursday, December 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மும்தாஜ் தற்போது மெக்கா புனித பயணம் சென்றுள்ள நிலையில் அங்கு அவர் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு கண்ணீருடன் பதிவு செய்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

டி ராஜேந்தர் இயக்கிய ’மோனிஷா என் மோனலிசா’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான மும்தாஜ் அதன் பிறகு விஜய் நடித்த ’குஷி’ உள்பட பல படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பாக பிரசாந்த் நடித்த சாக்லேட்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மல மல’ என்ற பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட மும்தாஜ் சிறப்பாக விளையாடினார் என்பதும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை செய்து வரும் மும்தாஜ் தற்போது தனது மெக்கா புனித பயணம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் தற்போது மெக்காவில் இருக்கிறேன் என்றும் அனைவருக்கும் நான் இங்கு பிரார்த்தனை செய்கிறேன் என்றும் இந்த பூமியில் எனக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு நான் பயணம் செய்திருப்பதால் என்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைவரையும் காப்பாற்றுங்கள் என்றும் நான் செய்த தவறுகள் அனைத்தையும் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுங்கள் என்றும் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தாருங்கள் என்றும் அவர் கண்ணீர் மல்க இறைவனை உடன் வழிபாடு நடத்தி உள்ளதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment