பிக்பாஸ் 'முகின்' நடிக்கும் முதல் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக ஹரிஷ் கல்யாண், ஆரவ், ரைசா வில்சன் உள்பட ஒரு சிலர் தமிழ் திரையுலகில் தற்போது பிசியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகின் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது முகின் நடிக்கவுள்ள முதல் படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ’வெப்பம்’ படத்தை இயக்கிய இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாகவும் அதில் மேலும் சில முக்கிய தகவல்கள் வெளியாகும் என்றும் குறிப்பிடதக்கது. இந்த படத்தை ஸ்ரீடி புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்நிறுவனத்தின் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Our production No 1 first look will be out today @ 11 AM !#ShirdiProductionNO1
— Shirdi Productions (@ShirdiProdn) September 28, 2020
Starring @themugenrao of Big Boss fame
Directed by @AlikhanAnjana director of Veppam @RathnaveluDop @editoranthony @nivaskprasanna @anukreethy_vas @actorkishore @DoneChannel1 @CtcMediaboy pic.twitter.com/Zt13559F9k
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments