'ஜெய் பெரியார்' கேப்ஷனுடன் நிர்வாண போஸ் கொடுத்த மீராமிதுன்: நெட்டிசன்கள் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சர்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்ட மீராமிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த பின்னரும் அவ்வப்போது தனது சமூக வலைதளத்தின் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி கண் கூசும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களையும் கிட்டத்தட்ட நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தன்னை தமிழ் திரை உலகம் ஒதுக்குவதாகவும், அதுவும் ஒரு வகையில் நன்மை தான் என்றும், தனக்கு பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் அவர் அவ்வப்போது குறிப்பிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ரஜினி மற்றும் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு டுவிட்டை பதிவு செய்தார் என்பதும் அதன் பின்னர் திடீரென உதயநிதியுடன் உள்ள புகைப்படத்தை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மீராமிதுனின் இந்த இரண்டு டுவிட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது அவர் திடீரென கருப்பு நிறத்தில் மேக்கப் போட்டு கொண்டு நிர்வாண புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ’ஜெய் பெரியார்’ என்ற கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடந்த 1975ஆம் ஆண்டு பெண்களுக்கான சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கினார் என்றும் தற்போது அந்த இயக்கத்தை தான் உருவாக்க தயாராக இருப்பதாகவும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்களுக்கும் அவர் டேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீராமிதுனின் இந்த புகைப்படம் மற்றும் கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருவதோடு மீம்ஸ்களை பதிவு செய்து கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
#JaiPeriyar_Tamilnadu questioned gender inequality prevalent in the society with women in the name of culture, tradition. Periyar’scredit (1925 )he founded the Self-respect movement with women liberation. @mkstalin @narendramodi Am here for TN Woman Empowerment. Am the START?? pic.twitter.com/UGtB941dGK
— Meera Mitun (@meera_mitun) July 19, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com