டூ பீஸ் உடையில் சன் பாத் எடுத்த பிக்பாஸ் மாயா.. மதுரை சிங்கப் பெண்ணுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் போட்டியாளர் நடிகை மாயா அட்லாண்டிக் கடலில் சன் பாத் எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த ஹாட் வீடியோவுக்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான மாயா, பூர்ணிமாவுடன் சேர்ந்து ஒரு கேங் அமைத்து மற்ற போட்டியாளர்களை வெளியேற்றும் சதியில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பாக பிரதீப் ஆண்டனி வெளியேறியது மாயா செய்த சதி என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மாயா ஒரு சில படங்களில் நாயகியாக நடிக்க கமிட்டாகி இருப்பதாகவும் அதனால் திரையுலகில் பிஸியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் மாயா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளவர் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அதில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார்.
அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அட்லாண்டிக் கடலில் டூ பீஸ் உடையில் சன் பாத் எடுக்கும் வீடியோவை பதிவு செய்த நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
இந்த பதிவில் மாயா, ‘நான் இதுவரை நீந்திய கடல்களில் இதுதான் மிகவும் குளிரான கடல். ஆனால் அதே நேரத்தில் மிகச் சிறந்த கடல்களில் ஒன்று. இங்கு சூரிய குளியல் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு 'மதுரை சிங்கப்பெண் மாயா’ உட்பட ஏராளமான கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com