அமெரிக்காவில் பயிற்சி பெறும் பிக்பாஸ் மாயா.. அடுத்த ஒலிம்பிக் சாம்பியனா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் மாயா அமெரிக்காவில் ஒரு முக்கிய விளையாட்டின் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நீங்கள் தான் சாம்பியன் என்பது போன்ற கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் மாயா என்பது அவர் மிகவும் திறமையாக விளையாடி கடைசி வரை இந்த போட்டியில் இருந்தார் என்பதும் தெரிந்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயாவுக்கு நெகட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் சில திரைப்படங்களிலும் வாய்ப்பு பெற்றார் என்பதும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிநாடு சென்ற புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் அமெரிக்காவுக்கு சென்ற போது வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அமெரிக்கா சென்றிருந்த போது வில்வித்தை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதாகவும், ஆரம்பத்தில் சாதாரணமாக இந்த பயிற்சியை எடுத்த பிறகு எனது சகோதரிகள் கொடுத்த ஆர்வம் காரணமாக தற்போது அதில் முழு காதலுடன் ஈடுபட்டதாகவும், ஆர்வத்துடன் தொடங்கிய பயிற்சி திறமையுடன் முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தை பிரிவில் கலந்து கொள்ளுங்கள், உங்களுக்குத்தான் சாம்பியன் பட்டம் கிடைக்கும் என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com