பிக்பாஸ் செட்டிற்கு சீல் வைத்த சென்னை போலீஸார்: பரபரப்பு தகவல்!

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

பிக்பாஸ் மலையாளம் நிகழ்ச்சி சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைத்து நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளிவந்ததூ.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆறு போட்டியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் பிக்பாஸ் குழுவினர் கொரோனா வைரஸ் விதிமுறைகளை பின்பற்றாமல் இருந்ததாகவும் தெரிகிறது

இதனையடுத்து காவல்துறையினர் அதிரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்த செட்டை இழுத்து மூடி சீல் வைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் பிக்பாஸ் குழுவினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் பிக்பாஸ் விதிமுறைகளை மீறியதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.