பிக்பாஸ் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான விஜே மகேஸ்வரியின் மகன் புகைப்படம் வெளியாகி உள்ள நிலையில் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி தற்போது 70 நாட்களுக்கு மேலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் ஒருவர் மகேஸ்வரி என்பதும் தெரிந்ததே. விஜே மகேஸ்வரி சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தாலும் 35 வது நாளிலேயே வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விஜே மகேஸ்வரி சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜே மகேஸ்வரி தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மகேஸ்வரிக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மகேஸ்வரி திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்றும் என்பதும் இவருக்கு கேசவன் என்ற மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com