இது நிச்சயம் சுயநலமல்ல, எல்லோரும் கடைபிடியுங்கள்: நடிகர் மகத்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று திரையுலகில் வாய்ப்புகளை பெற்ற நடிகர்களில் ஒருவர் மகத். இவர் தற்போது ’கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’ ’நான்தான் உத்தமன்’ ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் ’சைக்கிள்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் மகத் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிராய்ச்சி தேசாய் என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இவர்களது திருமணம் முடிந்த ஒருசில வாரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த தம்பதிகள் தற்போது கொரோனா விடுமுறையை சந்தோஷமாக கழித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் நடிகர் மகத் ‘லவ்’ குறித்த ஒரு தத்துவத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ’உங்களை நீங்களே நேசிப்பது சுயநலமல்ல. உங்களுடைய தூய்மையான இதயம் உங்களை கவனித்து கொள்ளும். உங்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் நிச்சயம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பெண் எழுத்தாளர் மாண்டி ஹாலே என்பவர் கூறிய இந்த தத்துவத்தை நடிகர் மகத் பதிவு செய்ததை அடுத்து, இந்த பதிவுக்கு நெட்டிசன்களின் ஆதரவு பெருகி வருகிறது.
It’s not selfish to #love yourself ?? take care of yourself, and to make your happiness a priority! It’s necessary ??
— Mahat Raghavendra (@MahatOfficial) August 27, 2020
-Mandy Hale-
❤️?? pic.twitter.com/VcslrFcyRY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com