பிக்பாஸ் மகத் நடித்த ரொமான்ஸ்-காமெடி திரைப்படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் மகத், தற்போது மூன்று திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மகத் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’காதல் கண்டிஷன் அப்ளை’. லிப்ரா புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் மகத் ஜோடியாக சனா நடித்துள்ளார். மேலும் டிடி என்ற திவ்யதர்ஷினி, வெங்கட் பிரபு, விவேக் பிரசன்னா, அபிஷேக், மகேஸ்வரி, மனோபாலா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
ரமேஷ் தமிழ்மணி இசையில், கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவில், ரவி பாண்டியன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அரவிந்த் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீஸ்-க்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாரான நிலையில் தற்போது செப்டம்பர் 15ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரிலீஸ் தேதியுடன் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#RavindharChandrasekaran & @shvedhgroup by @Nitinsathyaa presents #KaadhalConditionsApply *ing @MahatOfficial & @SANAKHAN_93 in theatres near you from Sep 15th,2023 @arvindfilmmaker @karthiknallamu1 @edit_anand @Ramesharchi @vp_offl pic.twitter.com/0WrzViwAMS
— LIBRA Productions (@LIBRAProduc) August 21, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments