கொரோனாவால் இறந்தால் இறுதிச்சடங்கு எப்படி இருக்கும் தெரியுமா? எச்சரிக்கும் பிக்பாஸ் பிரபலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா விழிப்புணர்ச்சி குறித்தும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே ஒரு வீடியோவை வெளியிட்ட நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மதுமிதா, தற்போது மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:
சமீபத்தில் பிரபல இயக்குனர் விசு அவர்கள் காலமானார். அவரது மறைவிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து இருந்தாலும் மிகச் சிலர் மட்டுமே இறுதி சடங்கில் கலந்து கொண்டனர் கொரோனா காரணமாக அனைவரும் தனிமைப்படுத்துதலில் இருப்பதால் அந்த இறுதிச் சடங்கில் திரையுலகினர் கலந்து கொள்ள முடியவில்லை. ஒரு பழம்பெரும் இயக்குனர் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள முடியாது அனைவருக்கும் வருத்தமே.
இயற்கை மரணம் எய்த விசு அவர்களுக்கே இந்த நிலை என்றால் கொரானாவில் மரணம் அடைந்தால் அந்த இறுதிச்சடங்கு எப்படி இருக்கும் தெரியுமா?
கொரோனாவால் இறந்தவரின் உடலில் இருக்கும் ஒரு சின்ன பகுதி கூட வெளியே தெரியாதபடி மொத்தமாக பாலித்தீன் பைகளால் மூடி, நான்கு பேர் மட்டுமே ஒரு மீட்டர் இடைவெளியில் இறுதி சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் ஒரு பெரிய பள்ளம் தோண்டி பிணத்தை தூக்கி போட்டு மண்ணால் மூடி விடுவார்கள்
இந்தியாவை பொருத்தவரை யாராவது இறந்து போனால் கடைசியாக கட்டி பிடித்து மேலே புரண்டு அழும் வழக்கம் உண்டு .ஆனால் கொரோனாவால் இறந்தால் அருகில் சென்று கூட பார்க்க கூட முடியாத நிலை இருக்கும். எனவே இதை மிகப்பெரிய விஷயமாக அனைவரும் பொருட்படுத்தி தனிமைப்படுத்துவதை கடைபிடிக்க வேண்டும்.
பல பேருக்கு இன்னும் இது குறித்த விழிப்புணர்ச்சி தெரியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கையை அறுத்து கொண்டு தற்கொலை செய்ய முயன்ற உனக்கு இதெல்லாம் சொல்ல என்ன அருகதை இருக்கு? என்று ஒருசிலர் கேட்கின்றனர். அதையெல்லாம் இப்போது பேசும் நேரமில்லை இப்போதைக்கு கொரோனாவில் இருந்து அனைவரும் மீண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். தயவு செய்து அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மதுமிதா கூறியுள்ளார்.
விசு சாரின் இறுதி ஊர்வலம் இப்படியா இருந்திருக்கும்??
— IndiaGlitz - Tamil (@igtamil) March 27, 2020
- Actress #Madhumitha #COVID19 #IndiaFightsCorona @ActorMadhumitha @johnmediamanagr pic.twitter.com/BeO4b5Vy7k
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments