பிக்பாஸ் லாஸ்லியாவா இவர்? வேற லெவல் வொர்க்-அவுட்: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,June 11 2023]

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின்னர் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவினை காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் பிரிந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் ’கூகுள் குட்டப்பா’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் அதன் பிறகு அவருக்கு வேறு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர் இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதால் இனிமேல் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவல் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது பயிற்சியாளருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் 2021 இல் எனது வொர்க் அவுட்டை தொடங்கினேன். இது ஒரு மிக நீண்ட பயணம். இந்தப் பயணத்தில் நிறைய தடைகளை சந்தித்தேன். இது எளிதான வேலை இல்லை, சில நேரங்களில் என்னால் எழுந்திருக்க முடியாது. இன்னும் தூங்க வேண்டும் என்பது போல் இருக்கும். இன்னும் சில நேரங்களில் என் உடல் என்னுடன் ஒத்துழைக்காது.

ஆனால் நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன், சீக்கிரம் எழுந்து என் வேலையை செய்வதால், எனது அன்றாட வழக்கமான வேலையை செய்வதால் எவ்வளவு ஒழுக்கமாக இருக்கிறேன் என்பதைக் கற்றுக் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டது. நான் இப்போது வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணர்கிறேன். எனக்கு ஊக்கம் கொடுத்த எனது பயிற்சியாளருக்கு நன்றி.