கவினுடன் பிரேக்-அப் ஆனது உண்மையா? முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

  • IndiaGlitz, [Monday,April 04 2022]

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் உருகி உருகி காதலித்த கவின் மற்றும் லாஸ்யா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நேரெதிராக ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளாமல் இருந்தனர். இதனால் இருவரும் பிரிந்து விட்டதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் கவினுடனான ரிலேஷன்ஷிப் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் லாஸ்லியா கூறியபோது, ‘பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நாங்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மை தான். அந்த வீட்டில் இருக்கும்போது வேறு யாருமே இல்லை என்பதால் அவர் எனக்கு உற்ற துணையாக இருந்தார்.

ஆனால் வெளியில் வந்து பார்க்கும்போது அவருடைய கேரக்டர் வேறு மாதிரி இருந்தது. எங்கள் இருவருக்கும் செட் ஆகவில்லை. எனவே நாங்கள் பிரேக்கப் ஆகிவிட்டோம் என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவருக்கும் பிரேக்அப் ஆகியது உண்மைதான் என்பது தற்போது தெரியவந்துள்ளது.