பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்: ஹீரோ, இயக்குனர் யார்?

  • IndiaGlitz, [Sunday,August 30 2020]

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் ஆக்சன்கிங் அர்ஜூன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் லாஸ்யா நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அறிமுக இயக்குனர் ராஜா சரவணன் என்பவர் இயக்கவுள்ள படத்தில் தான் பிக்பாஸ் லாஸ்லியா நாயகியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் பூரனேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க உள்ளார். இது ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் என்றும் இந்த படத்தின் நாயகி கேரக்டருக்கு லாஸ்லியா பொருத்தமாக இருப்பார் என்பது மட்டுமின்றி அவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றுள்ளததால் அவரை தேர்வு செய்ததாகவும் இயக்குனர் ராஜா சரவணன் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் டில்லிபாபு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.