பிக்பாஸ் லாஸ்லியா தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, குறுகிய காலத்தில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் என்பதும், கிட்டத்தட்ட கடந்த சீசனில் இறுதி வரை சென்ற போட்டியாளர்களில் ஒருவர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது. லாஸ்லியாவின் ரசிகர்களுக்கு இந்த தகவல் பேரதிர்ச்சியாக உள்ளது. கடந்த சீசனில் லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபின்னர் தான் நிகழ்ச்சியில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. அவர் தனது மகளை அன்புடன் கண்டித்த விதம் ஒவ்வொரு தகப்பனையும் மகிழ்வித்தது.
லாஸ்லியாவின் தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய ஆத்மா சாந்தியடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் லாஸ்லியா தனது தந்தையார் இறந்தது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com