நண்பருக்கு ஒரு லட்டு, எதிரிக்கு ஒரு லட்டு.. பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட் டாஸ்க்..!

  • IndiaGlitz, [Tuesday,November 14 2023]

கடந்த சில நாட்களாக விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு ஒரு வித்தியாசமான டாஸ்க் வைக்கப்படுகிறது. இன்றைய டாஸ்க்கில் பிக் பாஸ், போட்டியாளர்கள் தங்களது சக போட்டியாளர்களுக்கு லட்டு வழங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

இதற்காக லட்டுகள் பிக் பாஸ் தரப்பிடம் இருந்து அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த லட்டில் ஒரு லட்டை எடுத்து நண்பராக கருதுவோருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அர்ச்சனா லட்டை எடுத்து விசித்ராவுக்கு கொடுத்து எனது வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு நண்பனாக அவரை கருதுகிறேன், எனக்காக அவர்கள் நின்றார்கள் என்று கூறினார். இதனை அடுத்து பூர்ணிமா அர்ச்சனாவுக்கு லட்டு கொடுக்கிறார். உங்களுடன் நான் நல்ல முறையில் நட்பை எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.

அதன்பின்னர் இந்த லட்டை எதிரிக்கும் கொடுக்கலாம் என்று பிக் பாஸ் தெரிவிக்கிறார். இதனை அடுத்து மாயா விஷ்ணுவுக்கும், மணிசந்திரா தினேஷ்க்கும், பூர்ணிமாவுக்கு அர்ச்சனாவும் கொடுக்கின்றனர்.

அதேபோல் எனது எதிரியாக நான் ஜோவிகாவை நினைத்து அவருக்கு கொடுக்கிறேன் என விசித்ரா லட்டு கொடுக்க, பதிலுக்கு ஜோவிகாவும் விசித்ராவுக்கு லட்டு கொடுத்தார். பூர்ணிமாவும் விசித்ராவுக்கு லட்டு கொடுத்து அதற்கான காரணத்தை கூறும்போது ’விசித்ராவின் பக்கத்தில் போய் பார்த்தால் அவரிடம் உண்மை இருக்காது என்று கூறினார்

அதேபோல் ஜோவிகா ’சில இடங்களில் விசித்ரா காட்டும் பாசம் போலியானதாக தெரிகிறது என்று கூறினார். இதனை அடுத்து விசித்ராவிடம் அதிக லட்டுகள் இருக்கும் நிலையில் திடீரென ஒரு ட்விஸ்ட்டை பிக் பாஸ் அறிவிக்கிறார். அந்த ட்விஸ்ட்டை கேட்டு விசித்ரா சந்தோஷம் அடைகிறார். அது என்ன ட்விஸ்ட் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.