பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து எடுக்கப்பட்ட அதிரடி முடிவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸ் கன்னட நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
பிக்பாஸ் கன்னடம் நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தொடங்கி 70 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொள்வதாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் சேனலின் தலைவர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சி 70 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் தற்போது 11 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். மழை உள்ளிட்ட பல சவால்களை இந்த நிகழ்ச்சி சந்தித்து விட்ட நிலையில் வெளியில் மோசமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த சூழ்நிலை தெரியாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்கள் தனிமையில் இருப்பது பாதுகாப்பு தான் என்றாலும் வெளியில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
இதனை அடுத்து போட்டியாளர்களிடம் பேசி அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். 100 நாட்கள் என்று திட்டமிட்ட இந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்படுவது ஒரு கடினமான முடிவு தான். இருப்பினும் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்படுவது நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம். வேறு எந்த பெரிய பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் மனநிலை மற்றும் சூழ்நிலையை கருதி இந்த நிகழ்ச்சியை நிறுத்துகிறோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் ஜூனில் தொடங்க திட்டமிட்ட நிலையில் அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும் என தெரிகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout