நேர் வழியா? குறுக்கு வழியா? ஐஸ்வர்யாவை மறைமுகமாக கலாய்த்த கமல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நிலையில் யார் மனதையும் புண்படுத்தாமல் உண்மையாக விளையாடிய ரித்விகாவிற்கு 'பிக்பாஸ் 2' டைட்டில் கிடைக்கவுள்ளது. இந்த டைட்டிலை அடைய ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் பல குறுக்கு வழிகளை கையாண்டனர். மும்தாஜ் அன்பு என்ற ஆயுதத்தை கையிலெடுத்து முடிந்தவரை போராடினார். மகத் வன்முறையை கையிலெடுத்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புராமோவில் கமல் கூறியதாவது: நேர் வழியில் வெற்றியை அடைவது ஒரு வகை. குறுக்கு வழியில் அதே வெற்றியை கவர்வது இன்னொரு வகை. வெற்றி பெற போவது நேர் வழியா? குறுக்கு வழியா? என்பதை பார்ப்போம்' என கூறியுள்ளார்.
ஏற்கனவே ஒருசில நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கூறிய அடுக்கடுக்கான பொய்களை வெளிச்சம் போட்டு காட்டிய கமல், குறுக்கு வழியில் வெற்றியை அடைய நினைப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டினார். ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் முழு ஆதரவு கொடுத்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் கமல்ஹாசன் நேரம் கிடைத்தபோதெல்லாம், ஐஸ்வர்யாவின் தவறுகளை சுட்டிக்காட்ட தவறவில்லை. ஒரு தவறான நபருக்கு டைட்டில் போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெறப்போவது நேர் வழியா?! குறுக்கு வழியா?! ???? #பிக்பாஸ் #GrandFinale - இன்று இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/lZf2QPJrtY
— Vijay Television (@vijaytelevision) September 29, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Rithesh Kumar
Contact at support@indiaglitz.com