close
Choose your channels

எனக்கு 2வது திருமணம் ஆகிவிட்டது: புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் காஜல்.. உண்மை என்ன?

Wednesday, December 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட காஜல் தனக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது.

நடன இயக்குனர் சாண்டியை பிக் பாஸ் காஜல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதனை அடுத்து சாண்டி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் காஜல் மட்டும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில் திடீரென தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரோ ஒருவர் தாலி கட்டுவது போன்ற புகைப்படத்தை பதிவு செய்து தனக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளதாக பதிவு செய்துள்ளார்

‘எனக்காக அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். திடீரென முடிவு செய்யப்பட்டு விட்டதால் யாரையும் அழைக்க முடியவில்லை, எனவே மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த புகைப்படம் பழைய புகைப்படம் போல் தெரிகிறது என்றும் உங்களுக்கு திருமணம் நடந்ததை நம்ப முடியவில்லை என்றும் கமெண்ட்ஸ் பகுதியில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். மேலும் சிலர் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளனர்.

உண்மையிலேயே காஜலுக்கு திருமணம் நடந்ததா? திருமணம் நடந்தது என்றால் கணவரின் புகைப்படத்தோடு ஏன் அவர் பதிவு செய்யவில்லை? அல்லது ஏதேனும் திரைப்பட படப்பிடிப்பா? போன்ற ரசிகர்களின் கேள்விகளுக்கு விரைவில் அவரே பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment