பிக்பாஸ் காஜல் பசுபதிக்கு திருமணமா? மாப்பிள்ளை யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை காஜல் பசுபதி தனக்கு திருமணம் என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவர் காஜல் பசுபதி. இவர் வைல்ட்கார்டு எண்ட்ரியாக வந்து ஒரு சில வாரங்களில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் டுவிட்டரில் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் பிக்பாஸ் சாண்டியின் முன்னாள் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை காஜல் பசுபதி திடீரென தனது டுவிட்டரில் தனக்கு திருமணம் என்று குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: திடீரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது....அடுத்த வாரம் திருமணம்....கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க.. மேலும் மாப்பிள்ளை யார் என்ற கேள்விக்கு சஸ்பென்ஸ் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் காஜல் பசுபதி தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு சில ரசிகர்கள் இது ஏற்கனவே வேறொருவர் பதிவு செய்த டுவிட் என்றும் காஜல், காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்றும் உண்மையிலேயே காஜல் பசுபதிக்கு திருமணமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் காஜல் பசுபதி தனக்கு திருமணம் என்றால் எதற்காக அவர் இன்னொருவரின் காப்பி பேஸ்ட் டுவிட்டை பதிவு செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி வருகின்றனர்
இதற்கு காஜல் பசுபதி என்ன பதில் சொல்லப்போகிறார்? உண்மையிலேயே அவருக்கு திருமணமா? என்பதை அடுத்த வாரம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
திடிரென திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது....அடுத்த வாரம் திருமணம்....கொரோனா காரணமாக யாரையும் அழைக்க முடியல .. தப்பா எடுத்துக்காதிங்க..????
— Kaajal Pasupathi (@kaajalActress) June 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments