பிறப்பில் ஜாதி பார்ப்பவர்கள், பிறப்புறுப்பில் ஜாதி பார்ப்பதில்லையே: பிக்பாஸ் ஜூலி ஆவேசம்
- IndiaGlitz, [Saturday,October 10 2020]
பிறப்பில் ஜாதி பார்க்கும் யாரும் பிறப்புறுப்பில் ஜாதி பார்க்கவில்லை என ஆவேசமாக பிக்பாஸ் ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அதற்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெற்ற பெயரை இழந்து மட்டுமின்றி அதிக நபர்களால் வெறுக்கப்படும் ஒரு போட்டியாளராக மாறினார். ஆனால் அதன் பின்னர் அவர் பல்வேறு போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை குறித்த சம்பவம் குறித்து அவர் முகத்தில் அடிபட்டு கொண்டிருப்பது போன்ற மேக்கப் போட்டுக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது குறித்து ஆவேசமாக கூறியுள்ளார்
கொரோனா கூட மற்றவர்களுக்கு வந்தால் நாம் பயப்படுவது இல்லை என்றும் நமக்கும், நம்முடைய குழந்தைகளுக்கும் வந்தால் மட்டும் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்கிறோம் என்றும், அதேபோல் பாலியல் பலாத்கார விஷயத்திலும் வேறு ஏதோ ஒரு பெண்ணுக்கு நேர்ந்தது என நாம் கவனிக்காமல் இருந்தால் நாளை நம் வீட்டுக் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
2019 ஆம் ஆண்டில் மட்டும் 32 ஆயிரத்து 33 பேர் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் நான்கு மாத குழந்தைகள் ஆயிரக்கணக்கில் இருப்பதாகவும் ஜூலி அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை குறித்த செய்திகளை முதல் இரண்டு நாட்கள் மட்டும் நாம் ஆவேசமாக பேசுகிறோம் என்றும், அதன் பின்னர் மறந்துவிடுகிறோம் என்றும் இந்த இப்பொழுது நாம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால் எப்பொழுதுமே விழிப்புணர்வு கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார்
பாலியல் வன்கொடுமைகளுக்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்றும் பிறப்பில் சாதி பார்க்கும் பலர், பிறப்பு உறுப்பில் மட்டும் ஜாதி பார்ப்பதில்லையே என்றும் காம வெறி பிடித்த ஆண்களை ஆவேசமாக சாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
View this post on InstagramA post shared by Julee Veerathamizhachi (@mariajuliana_official) on Oct 7, 2020 at 5:11am PDT