நர்ஸ்கள் போராட்டத்திற்கு பிக்பாஸ் ஜூலி ஆதரவு

  • IndiaGlitz, [Wednesday,November 29 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில் ஒருவர் ஜூலி என்பதும், அவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழகம் முழுவதும் புகழ் பெற்றவர் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் அடிப்படையில் ஒரு நர்ஸ் பணி புரிபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்து வரும் செவிலியர்களின் போராட்டத்திற்கு ஜூலி நேரில் சென்று ஆதரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'ஒரு சாதாரண கூலி வேலை செய்பவர்களுக்கு கூட தினக்கூலியாக ரூ.500 கொடுக்கப்படுகிறது. ஆனால் கஷ்டப்பட்டு நாள் முழுவதும் பணிபுரியும் நர்ஸ்களுக்கு ரூ.250 மட்டுமே தினசரி சம்பளமாக கிடைக்கின்றது. ஒரு சராசரி மனிதனுக்கு இந்த தொகை மிகவும் குறைவு என்று கூறியுள்ளார்.