close
Choose your channels

திடீரென மாலையும் கழுத்துமாக பிக்பாஸ் ஜூலி.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Thursday, May 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி திடீரென மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி. நர்ஸ் பணி செய்த இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டதால் மக்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் விளையாடிய விதம் பலருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால் அதே நேரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் சிறப்பாக விளையாடினார் என்பதும் சீசன் 1 நிகழ்ச்சியில் திட்டிய ரசிகர்களே அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் விளையாடிய விதத்தை பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக் பாஸ் ஜூலி தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் டிவி சீரியல் படப்பிடிப்பு ஒன்றிற்காக திருமண கோலத்துடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் ஜூலியின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அதன் பின் தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்பிற்காக தான் இந்த கெட்டப் என்பதை பின்னர்தான் அறிந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment