இளைஞருக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் பிக்பாஸ் ஜூலி: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த நிகழ்ச்சியின் மூலம் கடும் விமர்சனங்களை பெற்றார். ஏற்கனவே ஜல்லிக்கட்டு மூலம் புகழ்பெற்றிருந்த ஜூலிக்கு, பிக் பாஸ் மூலம் நெகட்டிவ் விமர்சனம் கிடைத்தாலும் திரையுலகிலும் தொலைக்காட்சியிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக அவர் கிளாமரான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருக்கும் முத்தம் கொடுக்க செல்வது போன்ற ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவின் கேப்ஷனாக ‘என் உயிருடன் நான்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த இளைஞர் உங்கள் காதலரா? உங்கள் பாய் பிரண்டா? என்று கேள்வியை எழுப்பி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது