பிக்பாஸ் புகழ் ஜுலிக்கு இன்று திருப்புமுனை நாள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தவராக ஓவியாவை கூறினால், இருந்த புகழையும் இழந்தவர் என்று ஜூலியை கூறலாம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட வீராங்கனை என்ற புகழை பெற்ற ஜூலியின் ஒரிஜினல் முகம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வெளிப்பட்டதால் அதிகபட்ச நபர்களால் வெறுக்கப்படும் ஒரு நபராக ஜூலி இருந்தார்
பிக்பாஸ் நிகழ்ச்சியால் நெகட்டிவ் விமர்சனம் பெற்றாலும் திரையுலகில் அவருக்கு வாய்ப்புகள் ஓரளவு வந்து கொண்டிருந்தது. அதில் குறிப்பாக நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அரியலூர் அனிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அனிதாவாக நடிக்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்தது. இந்த நிலையில் 'டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்' என்ற டைட்டிலுடன் உருவாகும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியது. இந்த படம் ஜூலியின் நெகட்டிவ் இமேஜை சுத்தமாக போக்கி அவருக்கு ஒரு மரியாதையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்று ஜூலிக்கு ஒரு திருப்புமுனை நாள் என்றே கூறலாம்
இந்த படத்தை இயக்குனர் அஜய் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ஜூலி நடிப்பது குறித்து அஜய் கூறியதாவது: இந்த படத்தில் நாயகியாக ஜூலியை நடிக்கவைக்க பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திரைப்படத்தை பார்த்தபிறகு அவர்கள் கூறியது தவறு என்று உணர்வார்கள். வணிக ரீதியான வெற்றிக்காவோ பணம் பண்ணும் நோக்கிலோ இப்படத்தை நான் இயக்கவில்லை. மருத்துவ படிப்பு படிக்கச் முழு தகுதி இருந்தும் நம்
கல்வி முறைக்கு சிறிதும் பொருந்தாத ஒரு தேர்வுமுறையால் மாணவி அனிதாவிற்கு நேர்ந்தது போல் வேறு யாருக்கும் நேர்ந்துவிட கூடாது என்ற நோக்கமே காரணம். இத்திரைப்படம் தேசிய விருதை கண்டிப்பாக வாங்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'ஆய்வுகூடம்' படத்தின் நாயகன் ராஜ கணபதி நடிக்கவுள்ளார்.
தீணா இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு செல்வா ஒளிப்பதிவாளராகவும் P.C.மணிவர்மா கலை இயக்குநராகவும் ஆனந்தலிங்ககுமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றவுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout