'பிக்பாஸ்' வின்னர் யார்? பிரபல நடிகர் கணிப்பு

  • IndiaGlitz, [Friday,July 07 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பலர் கழுவிகழுவி ஊற்றினாலும் இன்றைய தமிழகத்தின் ஹாட் டாக் அந்த நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ அனைவரையும் முழு நிகழ்ச்சியையும் பார்க்க வைத்து விடுகிறது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராளியான ஜூலியை நேற்று தலைவி காயத்ரியும், நடிகை ஆர்த்தியும் டார்ச்சர் செய்து அழ வைத்துவிட்டனர். ஜூலியை வெறுப்பேற்றும் வகையில் இருவரும் மாறி மாறி கேள்வி கேட்டதால் கதறி அழுத ஜூலி ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே செல்ல முடிவெடுத்தார்
நடிகை ஓவியா, நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் சக்தி வாசு ஆகியோர் ஜூலிக்கு ஆறுதல் கூறியதால் அவர் சமாதானமானார். ஒரு பிரச்சனை வந்தால் அதை தீர்க்க வேண்டிய தலைவியே பிரச்சனை உண்டாக்குவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காயத்ரி மற்றும் ஆர்த்தியின் டார்ச்சரே ஜூலியை இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாற்றிவிடும் என்று பிரபல காமெடி நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு கமெண்ட் பதிவு செய்த பலர், ஜூலி ஓவர் ஆக்டிங் செய்வது உண்மைதான் என்றாலும் காயத்ரி, ஆர்த்தியின் டார்ச்சர் முகம் சுளிக்க வைப்பதாக கூறியுள்ளனர்.

More News

'விவேகம்' படத்திற்காக இயக்குனர் சிவா எழுதிய பாடல் இதுதான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ளது.

தல அஜித்தின் 'விவேகம்' ரன்னிங் டைம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு 'ஏகே', கருணாகரனுக்கு 'ஆப்ஸ்': விவேகம் அப்டேட்ஸ்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையில் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித், கருணாகரன் ஆகியோர்களின் கேரக்டர் பெயர் மற்றும் இருவருக்குமான காட்சிகள் குறித்து இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரு திரைப்படம் பார்க்க எவ்வளவு செலவு ஆகும்?

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

நாளை முதல் திரையரங்குகளின் புதிய டிக்கெட் கட்டணம்

'ஒரே நாடு ஒரே வரி' என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கம் தான் என்பதும் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியையும் சேர்த்து கட்ட வேண்டும் என்பதுதான் தலைவிதியாக உள்ளது என்பதும் தான் இன்றைய நிலையாக உள்ளது