வீர்ம்ன்னா என்னன்னு தெரியுமா? ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிக்பாஸ் ஜூலி!

  • IndiaGlitz, [Thursday,April 15 2021]

வீரம் என்றால் என்ன என்று தெரியுமா? என ரசிகர் ஒருவரின் கமெண்டுக்கு பிக்பாஸ் ஜூலி பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் மிகப் பெரிய புகழை பெற்ற ஜூலி, அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய பெயரையும் புகழையும் கெடுத்துக்கொண்டார். குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா மீது அவர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதை அடுத்து ரசிகர்களை அவர் மீது கோபம் அடைந்தனர்.

இதனை அடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் அவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துக் கொண்டே வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவ்வப்போது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். சில சமயம் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்து வருகிறார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு பெரும்பாலும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை ஜுலி வெளியிட்ட நிலையில் ரசிகர் ஒருவர் இந்த வீடியோவுக்கு அளித்த கமெண்ட்டில், ‘இவர் தான் நம்முடைய முன்னாள் வீர தமிழச்சி’ என்று பதிவு செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ஜூலி, ‘வீரம் என்றால் என்ன தெரியுமா? வீரம் என்பது உடையில் இல்லை, உங்களை மாதிரி கமெண்ட்ஸ் போட்டவர்களை 4 வருஷமா எதிர் கொண்டு இருக்கிறது தான் வீரம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜூலியன் இந்த பதிலடிக்கு ஒரு சிலர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ‘இளமையென்னும் பூங்காற்று’ என்னும் பாடலுக்கு சில கிளாமர் அசைவுகளுடன் ஜூலியின் நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஆக்சன் காட்சிகளுக்காக ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காஜல் அகர்வால்!

ஹீரோக்களுக்கு இணையாக தற்போது ஹீரோயின்களும் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் ஒரு சிலர் நடித்து வருகிறார்கள்

திருமா பதிவிட்ட ஒரு புகைப்படம்....! மனம் உருகிய நெட்டிசன்கள்...!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், தனது தாயாரின் புகைப்படத்தை வெளியிட்டு "மதுரையில் அம்மாவுடன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

10 மாவட்டங்களில் கனமழை....!வானிலை ஆய்வு மையம் தகவல் ..!

தமிழகத்தில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பெற்ற தாயை கொன்ற மகன்....! துரோகத்தால் நேர்ந்த கதி...!

15 வயதே நிரம்பிய மகன், தாயை கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தையே உலுக்கியுள்ளது.

முதல்முறையாக தமிழ்ப்பாடலை பாடிய துல்கர் சல்மான்: வைரல் புகைப்படங்கள்

பிரபல நடன இயக்குனர் பிருந்தா தற்போது 'ஹே அனாமிகா' என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடித்து வருகின்றார் என்பதும்,