சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி.. ஜோவிகாவை டோட்டலாக மாற்றிய வனிதா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவை டோட்டலாக மாற்றி எடுத்த இரண்டு விதமான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் இந்த நிகழ்ச்சியில் அவர் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் தைரியமான பெண் என்ற பெயர் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பார்த்திபன் இயக்கி வரும் திரைப்படத்தில் உதவியாளராக ஜோவிகா பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஜோவிகாவை முற்றிலும் கிளாமராக நேற்று மாற்றிய வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகியது.
இந்த நிலையில் ஜோவிகாவின் இன்றைய போட்டோஷூட்டில் சேலை காஸ்டியூமில் வீணையை கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் ’சின்னஞ்சிறு வயதில் எனக்கு ஒரு சித்திரம் தோணுதடி’ என்ற கேப்ஷடனையும் பதிவு செய்துள்ளார்.
நேற்று எடுத்த போட்டோஷுட் புகைப்படத்திற்கும் இன்று எடுத்த புகைப்படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதை அடுத்து இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout