அழுது கொண்டே ஜோவிகா சொன்ன சந்தோஷமான விஷயம்.. கைதட்டி வரவேற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,October 04 2023]

நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா, பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவராக களம் இறங்கி உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் அமைதியாக இருந்த நிலையில் தற்போது அவர் அழுது கொண்டே ஒரு சந்தோஷமான விஷயத்தை கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் பேசும்போது ’நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு நாட்களில் எனக்கு சந்தோஷமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே பள்ளி அனுபவங்களை உங்களிடம் சொல்லி இருக்கிறேன், நான் சில டிபேட்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் என்னை யாரும் விடவில்லை.

இப்போது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததால், அந்த திறமையை எனக்கு இருக்கிறது என்று இப்போதுதான் எனக்கே தெரிகிறது’ என்று அழுது கொண்டே சந்தோஷமாக கூற உடனே சக போட்டியாளர்கள் அவரை கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் ஆகி வருகிறது