பிக்பாஸ் ஜித்தன் ரமேஷின் நெகிழ்ச்சியான பதிவு!

  • IndiaGlitz, [Saturday,February 27 2021]

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதற்கு முன்னர் நடந்த மூன்று சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது நெருக்கமாக இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்கள் ஒருவருக்கொருவர் பெரிதாக தங்கள் நட்பை புதுப்பித்துக் கொண்டதாக தெரியவில்லை

ஆனால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னரும் அடிக்கடி ஒருவருக்கு ஒருவர் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்துக் கொண்டே வருகின்றனர். சக போட்டியாளர்களின் வீடுகளுக்கு செல்வது, இன்ப,துன்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, உள்பட பல நிகழ்ச்சிகளில் அனைத்து போட்டியாளர்களையும் காண முடிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அர்ச்சனா வீட்டின் நடந்த விசேஷம் ஒன்றில் கிட்டத்தட்ட அனைத்து பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ஜித்தன் ரமேஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியிருப்பதாவது:

உண்மையான பந்தம் என்பது எந்தவித முன் திட்டங்கள் இல்லாமல் உருவாகிறது. இந்த புதிய உறவுகள் கிடைத்ததை நான் பாக்கியமாகவே கருதுகிறேன். மீண்டும் அனைவரையும் சந்தித்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.