நீங்க ஓட்டு போடனும்ன்னு அவசியம் இல்லை.. திடீரென ஆவேசமான ஜெப்ரி..!

  • IndiaGlitz, [Wednesday,October 16 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென போட்டியாளர் ஜெப்ரி, மற்ற போட்டியாளர்களை நோக்கி, நீங்கள் ஓட்டு போட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சிரிக்காதீர்கள், என்று ஆவேசமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்றைய டாஸ்க்கில், ஜெப்ரி பேசி முடித்தவுடன், மற்ற போட்டியாளர்களின் வாக்குகளை கேட்டார். அதில், என்னால் முடிந்ததை, என் டீமுக்கு விட்டுக் கொடுக்காமல், நான் என்னுடைய பங்கை சரியாக செய்திருக்கிறேன், என்று தெரிவித்தார். அதற்கு சத்யா கேலியாக ஓகே ஜெப்ரி என்று கூறினார்.

அதை கேட்டு எல்லோரும் சிரித்தனர். உடனே ஜெப்ரி ஆவேசமாக, சிரிக்க வேண்டாம். ஓட்டு போட முடியுமென்றால் போடுங்கள். உங்களிடம் நான் வந்து 'ஓட்டு போடுங்கள்' எனக் கேட்டதேயில்லை. தயவுசெய்து சிரிக்காதீர்கள். பிக் பாஸ் சொன்ன ஒரு கேள்விக்கு நான் கட்டுப்பட்டு நிற்கிறேன். நீங்கள் ஓட்டு போட்டால் தான் உள்ளே, நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் நான் வெளியே அல்ல, என்று கூறினார்.

இதையடுத்து தனியாக உட்கார்ந்து வருத்தத்துடன் இருந்த ஜெப்ரியை விஷால் அணைத்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில், ஜெப்ரி உடைந்து அழும் காட்சியுடன், இன்றைய இரண்டாவது ப்ரொமோ முடிவடைந்தது.

More News

அனிருத்தின் மேஜிக்கல் வாய்ஸ்: 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் சிங்கிள் பாடல்..!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று வெளியாகி உள்ள நிலையில் அனிருத் பாடிய இந்த பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டைட்டிலுக்கு என்ன அர்த்தம்? விஜய் ஆண்டனியின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்..!

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில்,

மான நஷ்ட வழக்குப்பதிவு செய்துள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர்.. என்ன காரணம்?

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, ஊடகங்கள் மற்றும் YouTube சேனல்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏங்க இவ்வளவு வன்மத்தோட வாழுறீங்க.. பிக்பாஸ் போட்டியாளர் கேட்ட ஆவேசமான கேள்வி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், முதல் வாரம் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.

கால்பந்து போட்டியை ரசித்து பார்க்கும் அஜித்.. அவரே எடுத்த செல்பி வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் லண்டனில் கால்பந்து போட்டியை ரசித்து பார்க்கும் செல்பி வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.