நீங்க ஓட்டு போடனும்ன்னு அவசியம் இல்லை.. திடீரென ஆவேசமான ஜெப்ரி..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், திடீரென போட்டியாளர் ஜெப்ரி, மற்ற போட்டியாளர்களை நோக்கி, "நீங்கள் ஓட்டு போட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் சிரிக்காதீர்கள்," என்று ஆவேசமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய டாஸ்க்கில், ஜெப்ரி பேசி முடித்தவுடன், மற்ற போட்டியாளர்களின் வாக்குகளை கேட்டார். அதில், "என்னால் முடிந்ததை, என் டீமுக்கு விட்டுக் கொடுக்காமல், நான் என்னுடைய பங்கை சரியாக செய்திருக்கிறேன்," என்று தெரிவித்தார். அதற்கு சத்யா கேலியாக "ஓகே ஜெப்ரி" என்று கூறினார்.
அதை கேட்டு எல்லோரும் சிரித்தனர். உடனே ஜெப்ரி ஆவேசமாக, "சிரிக்க வேண்டாம். ஓட்டு போட முடியுமென்றால் போடுங்கள். உங்களிடம் நான் வந்து 'ஓட்டு போடுங்கள்' எனக் கேட்டதேயில்லை. தயவுசெய்து சிரிக்காதீர்கள். பிக் பாஸ் சொன்ன ஒரு கேள்விக்கு நான் கட்டுப்பட்டு நிற்கிறேன். நீங்கள் ஓட்டு போட்டால் தான் உள்ளே, நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் நான் வெளியே அல்ல," என்று கூறினார்.
இதையடுத்து தனியாக உட்கார்ந்து வருத்தத்துடன் இருந்த ஜெப்ரியை விஷால் அணைத்து ஆறுதல் கூறினார். இதற்கிடையில், ஜெப்ரி உடைந்து அழும் காட்சியுடன், இன்றைய இரண்டாவது ப்ரொமோ முடிவடைந்தது.
#Day10 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 16, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/7XtTct9ZXS
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)