'லியோ' படத்தில் நடித்த அனுபவம்.. பிக்பாஸ் ஜனனியின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Friday,October 20 2023]

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடித்த பிக் பாஸ் ஜனனி தனது அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் காபி ஷாப் வைத்திருக்கும் கேரக்டரில் விஜய் நடித்திருந்த நிலையில் அந்த கடையில் வேலை செய்யும் பெண்ணாக பிக்பாஸ் ஜனனி நடித்திருந்தார். இவரைத்தான் மிஷ்கின் குழுவினர் தாக்க வரும்போது, விஜய் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்படும் என்பது படம் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த நிலையில் ’லியோ’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஜனனி தனது சமூக வலைதளத்தில் கூறிய போது ’தளபதி விஜய் உடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்த நிலையில், அந்த கனவு நனவாகியதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு எனது நன்றி. எனது முதல் படமே எனக்கு மிகச்சிறந்த அனுபவத்தை கொடுத்தது என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

அடையாளத்தை மாத்துறதுக்கு போராடிட்டு இருக்கோம்.. அதுக்குள்ள திரும்ப தள்ளிறாதிங்க: 'லேபிள்' ட்ரைலர்..!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான 'லேபிள்' என்ற வெப் தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடிக்காக உருவாகி வரும் நிலையில் இந்த வெப் தொடரின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த வார ஸ்டிரைக்கிற்கு பழிவாங்கும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள்.. சாப்பாட்டில் கை வைத்ததால் பரபரப்பு..!

கடந்த வாரம் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் சமையல் செய்யாமல் ஸ்டிரைக் செய்ததால் பிக் ஹவுஸில் இருக்கும் போட்டி யாளர்கள் சாப்பிட முடியாமல் திண்டாடினர்.

பவா செல்லத்துரையை அடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற விரும்பும் பெண் போட்டியாளர்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் பிக்பாஸ் வீட்டில் இருந்து உடல் நிலையை காரணம் காட்டி பவா செல்லத்துரை வெளியேறிய நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டில் இருந்து

விஜயதசமி நாளில் ஜீ தமிழில் செம கொண்டாட்டம்.. லிஸ்ட் இதோ

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், எப்போதும் வித்தியாசமான கதைகளை கொண்ட சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் தொடர்ந்து மக்களை

மறுபடியும் 'லியோ' பார்க்கும்போது 15 நிமிஷம் முன்னாடி போயிடுங்க: கவுதம் மேனன்

'லியோ' திரைப்படத்தை பார்க்க செல்பவர்கள் படம் போடுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தியேட்டருக்கு சென்று விடுங்கள் என்று இயக்குனர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.