பரத் ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை: டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர், பரத் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தமிழ் சீசன் 2 போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி ஐயர். இவர் ஏற்கனவே ’அவன் இவன்’, ‘தெகிடி’, ‘முப்பறிமாணம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் பரத் நடிப்பில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் பரத் ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ’முன்னறிவான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதை அடுத்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜயராஜ் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் தொலைக்காட்சி பிரபலம் மிர்ச்சி செந்தில்குமார், கரு பழனியப்பன், சின்னிஜெயந்த் உள்ளிட்டோர் நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பரத் ‘8’, ‘6 ஹவர்ஸ்’, ‘ராதே’, ‘நடுவன்’, ‘காளிதாஸ்’, ‘பொட்டு’, ‘சிம்பா’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.