விஜய்யின் 'லியோ' படத்தில் பிக்பாஸ் ஜனனிக்கு இந்த கேரக்டரா?

  • IndiaGlitz, [Monday,February 27 2023]

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் ஜனனி என்பதும் இலங்கை சேர்ந்த ஜனனி இலங்கை தமிழ் மொழியில் பேசியது அனைவரையும் கவர்ந்தது என்பது தெரிந்ததே. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் 70 நாட்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடினார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்மிகளாக குவிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஜனனி, விஜய் நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் அவர் இந்த படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் ஜனனியிடம் இது குறித்து கேட்டபோது இப்போதைக்கு என்பது கேரக்டரை வெளியே சொல்ல முடியாது என்றும் கம்பெனி சீக்ரெட் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் விஜய்க்கு மகளாக நடிக்கிறேன் என்பதை அவர் மறுக்கவில்லை என்பதால் அவர் விஜய் மகள் கேரக்டரில் தான் நடிக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது காஷ்மீரில் ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அப்போது விஜய்யுடன் ஜனனி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

More News

தானாவே போதை ஏறுகிற மாதிரி ஒரு வியாதி சார்.. 'குடிமகான்' டிரைலர்..!

விஜய் சிவன், சாந்தினி தமிழரசன் நடித்த 'குடிமகான்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன்

உலகத்துல நடக்குற ஒவ்வொரு கொலைக்கும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும்: 'கண்னை நம்பாதே' டிரைலர்..!

 உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணை நம்பாதே' என்ற திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பாஜகவில் கமல், ரஜினி பட நடிகைக்கு புதிய பதவி.. அண்ணாமலை வாழ்த்து..!

 சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு பாஜக மேலிடம் புதிய பதவியை அளித்துள்ளதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' பட நடிகையா இவர்? செம ஸ்டைலிஷான புகைப்படம்..!

தமிழ் திரை உலகில் 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தனன்யாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 

கணவர் மற்றும் மகள்களுடன் நடிகை விஜி சந்திரசேகர்.. அபூர்வ புகைப்படங்கள்..!

 நடிகை விஜி சந்திரசேகர் தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.