திருமணத்தை மறைத்தது இதற்காகத்தான்: பிக்பாஸ் இசைவாணி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சவால்களை கூறியபோது இசைவாணி தன்னுடைய திருமணத்தையும் விவாகரத்தையும் மறைத்துவிட்டதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டிய நிலையில் இதுகுறித்து இசைவாணி தற்போது விளக்கமளித்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகிய இசைவாணி 49வது நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது தனக்கு திருமணமானதை மறைத்து ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
என்னுடிய திருமணத்தை திட்டமிட்டு மறைத்து விட்டதாக பலர் குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் நான் அதை தனிப்பட்ட பிரச்சினையாக கொண்டு வர விரும்பவில்லை. என்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டிய அவசியமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என்று நினைத்ததால் நான் அதைப் பற்றி பேசவில்லை என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com