'டாஸ்க்கில் தோத்துட்டா.. பெண் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் அதிர்ச்சி அறிவிப்பு.. ஆண் போட்டியாளர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது நாள் இன்று நடைபெறும் நிலையில் இன்று போட்டியாளர்களுக்கு முதல் டாஸ்க் குறித்த அறிவிப்பை பிக் பாஸ் தெரிவித்துள்ளார். இந்த டாஸ்க்கில் தோற்றுவிட்டால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்படும் என்று பிக் பாஸ் அறிவித்துள்ளதால் பெண் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் போட்டியாளர்கள் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் ’இது உங்களுக்கான முதல் ஷாப்பிங் டாஸ்க், இந்த டாஸ்க் பெயர் வெயிட் பார்ட்டி. இந்த டாஸ்க்கில் தோல்வி அடைந்து விட்டால் மேக்கப் பொருட்கள் அனைத்தும் உங்களிடம் இருந்து எடுத்துச் செல்லப்படும் என்று பிக்பாஸ் அறிவிக்கிறார்.
போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்து வந்து எடை மேடையில் நிற்க வேண்டும். எடை மேடை மிக சரியாக 340 கிலோ காண்பிக்க வேண்டும். அதைவிட அதிகமாகவோ குறைவாகவோ காண்பித்தால் அந்த குழு தோல்வி அடைந்ததாக கருதப்படும். அவ்வாறு தோல்வி அடைந்தால் அந்த குழுவில் உள்ளவர்களின் மேக்கப் பொருட்கள் அனைத்தும் பிக் பாஸ் எடுத்துச் சென்று விடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து எடை மேடையில் இருக்கின்றனர். ஆனால் 340 கிலோ சரியாக வராமல் கூடுதலாகவும் குறைவாகவும் வந்து கொண்டிருக்கும் நிலையில் முடிவு என்ன என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் முதல் டாஸ்க்கே வித்தியாசமாக இருப்பதை அடுத்த இந்த சீசன் ஆரம்பம் முதல் களைகட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Day4 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 5, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/kXU1bq3FV0
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments