உலகத்தின் மிக மோசமான நரகம் பிக்பாஸ் வீடு தான்: சொன்னது ஒரு போட்டியாளர்தான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகின் மிக மோசமான நரகம் பிக்பாஸ் வீடு தான் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான வனிதா விஜயகுமார் மன அழுத்தம் காரணமாக அந்த வீட்டிலிருந்து வெளியேறினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பல விஷயங்களை அவர் தெரிவித்துள்ளார்
பிக்பாஸ் வீடு ரொம்பவே இரிட்டேட்டான இடம் என்றும் அந்த வீட்டில் இருந்து வெளியேறி இத்தனை நாட்கள் ஆன பின்னரும் சகஜ நிலைக்கு இன்னும் திரும்பவில்லை என்றும் உளவியல் ரீதியாக போட்டியாளர்களுக்கு ஒரு நரகம் போல் இருக்கிறது அந்த வீடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பல மன வேதனைகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் போட்டியாளர்களாக பங்கு கொண்ட பலரும் நெகட்டிவ்விட்டி பிரச்சனையில் சிக்கி தவித்து வருகின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சி என்ற தன்மையை இழந்து தற்போது மெண்டல் டார்ச்சர்களை அனுபவிக்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்றும் அதனால் ஒரு சில நாட்கள் வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுத்து நிம்மதியை தேட போகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய நரகம் என்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளரே தெரிவித்திருப்பது பரப்பை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com