பிக்பாஸ் டைட்டில் வின்னர் மாரடைப்பால் மறைவு: அதிர்ச்சியில் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Thursday,September 02 2021]

பிக் பாஸ் டைட்டில் வின்னரும், பிரபல நடிகருமான ஒருவர் 40 வயதில் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

பிக்பாஸ் இந்தி 13வது சீஸனின் டைட்டில் வின்னர் சித்தார்த் ஷகுலா. இவர் பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ், தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 40 வயதான சித்தார்த் ஷகுல் திடீரென இன்று மாரடைப்பால் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து திரையுலக பிரபலங்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். பிக் பாஸ் டைட்டில் வின்னர் சித்தார்த் ஷகுலாவின் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.