இவரைத்தான் திருமணம் செய்ய போகிறேன். கணவருக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ் ஆர்த்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான ஆர்த்தி, கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் கணேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அந்த நிகழ்ச்சியின் மூலம் ஓரளவு புகழ் பெற்றார்.
ஆனால் ஜூலி மற்றும் ஓவியாவை அடிக்கடி இவர் குறை கூறி கொண்டிருந்ததால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி நான்காவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார். இருப்பினும் ஜூலி குறித்து ஆர்த்தி கூறியவை பின்னாளில் உண்மை என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதில் இருந்தே சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்த்தி, திடீரென தற்போது ஒரு ஆணின் புகைப்படத்தை பதிவு செய்து இவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், இவர் தான் தனது புதிய காதலர், டார்லிங் என்றும் தெரிவித்து, அதை தனது கணவருக்கும் டேக் செய்து உள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதன்பின் தான் ஃபேஸ் ஆப்’ செயலி மூலம் தனது முகத்தை ஆண் முகம் போல் மாற்றி உள்ள தகவல் தெரிந்தது. ரசிகர்களுக்கு ஷாக் மட்டும் டுவிஸ்ட் கொடுத்துள்ள ஆர்த்தியின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
My new lover my cute my darling I'm going to marry him.... Sorry @km_ganeshkar pic.twitter.com/gvHIfoSnwD
— Actress Harathi (@harathi_hahaha) June 21, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments