செல்ல மகளின் 2வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய பிக்பாஸ் நடிகர்: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் தனது செல்ல மகளின் இரண்டாவது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர் மற்றும் நடிகருமான கணேஷ் வெங்கட்ராமன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமான நிஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு திருமணமான 4 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு சமைரா என்று பெயர் வைத்தனர்
இந்த நிலையில் கணேஷ் வெங்கட்ராமன் - நிஷாவின் மகள் சமைராவின் இரண்டாவது பிறந்த நாளை சமீபத்தில் இவர்கள் சிறப்பாக கொண்டாடிய நிலையில் அது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணேஷ் வெங்கட்ராமன் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை அனைவரும் ரசித்து லைக்ஸ், கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com