சன் டிவியில் பிக்பாஸ் கேப்ரில்லா நடிக்கும் புதிய தொடர்.. ஹீரோ யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவியில் போட்டி போட்டுக்கொண்டு புதிய சீரியல் ஆரம்பம் ஆகிக்கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் கேப்ரில்லா நடிக்கும் புதிய சீரியல் ஆரம்பமாக உள்ளதாக சன் டிவி அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் கேப்ரில்லா. இவர் ’ஈரமான ரோஜாவே 2’ ’நந்தினி’ ’சாக்லேட்’ ’கண்ணான கண்ணே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பதும் இவரது நடிப்பு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி கொடுத்து உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சன் டிவியில் ’மருமகள்’ என்ற புதிய சீரியல் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கேப்ரில்லா மற்றும் ராகுல் ரவி ஆகிய இருவரும் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளனர். இந்த தொடரின் முன்னோட்ட வீடியோ சன் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த முன்னோட்ட வீடியோவில் அள்ளி அள்ளி பிறருக்கு வாரி கொடுக்கும் கேரக்டரில் கேப்ரில்லாவும் , யாருக்கும் கொடுக்காமல் தான் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் கேரக்டரில் ராகுல் ரவியும் நடித்திருக்கும் நிலையில் இருவரும் சேரும்போது என்ன பிரச்சனை உருவாகும் என்பதுதான் இந்த சீரியலின் கதை என்பது முன்னோட்ட வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
மேலும் இந்த சீரியல் தொடங்கும் தேதி மற்றும் ஒளிபரப்பாகும் நேரம் ஆகியவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments