'வாடி ராசாத்தி' பாடலுடன் கேபியை வரவேற்றவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
105 நாட்கள் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டுக்குச் சென்றபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்பு கொடுத்த வீடியோக்களை பார்த்து வருகிறோம்
ரம்யாவுக்கு பட்டாசு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு கிடைத்தது என்பதும், சோக்சேகருக்கு ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்பு அளித்த வீடியோவையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குபிடித்து கடைசியில் ரூபாய் 5 லட்சம் கொண்ட பெட்டியை எடுத்துக் கொண்டு புத்திசாலித்தனமாக போட்டியில் இருந்து வெளியேறியவர் கேப்ரில்லா.
இவர் தனது வீட்டிற்கு சென்ற பின்னர் தனது உயிர்தோழி ஸ்ரீநிதியின் வீட்டிற்கு சமீபத்தில் சென்றபோது ’வாடி ராசாத்தி’ என தனது தோழியை அவர் கட்டிப்பிடித்து வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கேபி குறித்து அவரது தோழி ஸ்ரீநிதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடுவேன் என்று கேபி கூறிவிட்டு சென்றது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது. எங்கள் அனைவருக்கும் தெரியும் அவள் அப்படித்தான் விளையாடி இருக்கிறாள். கேபி சூட்கேஸை எடுக்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு முன்னர், நாங்கள் அனைவரும் கேபி சூட்கேஸை எடுத்து வந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் உண்மையில் அவள் அதை செய்த போது எங்களுக்கு மெய் சிலிர்த்தது. இவ்வளவு அறிவு என் செல்லக்குட்டிக்கு எங்க இருக்குனு யோசிக்க வச்சிட்ட.நீ அனைத்திற்கு தகுதியானவள்’ என்று பதிவு செய்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com