'வாடி ராசாத்தி' பாடலுடன் கேபியை வரவேற்றவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ!

105 நாட்கள் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஐவரும் நிகழ்ச்சி முடிந்தவுடன் வீட்டுக்குச் சென்றபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமாண்டமான வரவேற்பு கொடுத்த வீடியோக்களை பார்த்து வருகிறோம்

ரம்யாவுக்கு பட்டாசு மேளதாளங்கள் முழங்க வரவேற்பு கிடைத்தது என்பதும், சோக்சேகருக்கு ஆரத்தி எடுத்து அன்புடன் வரவேற்பு அளித்த வீடியோவையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் வரை தாக்குபிடித்து கடைசியில் ரூபாய் 5 லட்சம் கொண்ட பெட்டியை எடுத்துக் கொண்டு புத்திசாலித்தனமாக போட்டியில் இருந்து வெளியேறியவர் கேப்ரில்லா.

இவர் தனது வீட்டிற்கு சென்ற பின்னர் தனது உயிர்தோழி ஸ்ரீநிதியின் வீட்டிற்கு சமீபத்தில் சென்றபோது ’வாடி ராசாத்தி’ என தனது தோழியை அவர் கட்டிப்பிடித்து வரவேற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கேபி குறித்து அவரது தோழி ஸ்ரீநிதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடுவேன் என்று கேபி கூறிவிட்டு சென்றது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது. எங்கள் அனைவருக்கும் தெரியும் அவள் அப்படித்தான் விளையாடி இருக்கிறாள். கேபி சூட்கேஸை எடுக்கும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு முன்னர், நாங்கள் அனைவரும் கேபி சூட்கேஸை எடுத்து வந்தால் நல்லா இருக்குமே என்று நினைத்தோம். ஆனால் உண்மையில் அவள் அதை செய்த போது எங்களுக்கு மெய் சிலிர்த்தது. இவ்வளவு அறிவு என் செல்லக்குட்டிக்கு எங்க இருக்குனு யோசிக்க வச்சிட்ட.நீ அனைத்திற்கு தகுதியானவள்’ என்று பதிவு செய்துள்ளார்

More News

பிக்பாஸ் சோம்சேகரை வரவேற்கும் க்யூட் வீடியோ வைரல்! பின்னணியில் 'மெர்சல்' பாடல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெகு சீக்கிரமே வெளியேறி விடுவார் என்று ரசிகர்களால் ஊகிக்கப்பட்டவர்களில் ஒருவர் சோமசேகர். ஆனால் அனைவரின் ஊகத்தை பொய்யாக்கி இறுதிப்போட்டி வரை அவர் சென்றது அனைவருக்கும்

சில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராமை முடக்கிவிட்டார்கள்: தமிழ் நடிகை

சில ஜோக்கர்கள் என் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி விட்டார்கள் என்றும் சில நாட்களுக்கு என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகும் எந்த பதிவுகளுக்கும் பதில் அளிக்க வேண்டாம்

தமிழகத்தில் அதிமுக 3 ஆவது முறையாக ஆட்சி அமைக்கும்- டெல்லி சென்ற முதலமைச்சர் நம்பிக்கை!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஆரவாரம் இப்போதே களைக்கட்டி விட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் பயணமாக நேற்று மதியம் டெல்லி சென்றார்.

நட்டியின் நடத்தையில் சந்தேகம்: வாங்கி கட்டிக்கொண்ட வார்னே!

நடராஜனின் பந்துவீச்சை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த ஆஸ்திரேலியா முன்னாள் பந்துவீச்சாளர் ஷேர்வார்னேவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது

பிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியாவின் வெற்றிக்கு குவிந்து வரும் வாழ்த்துக்கள்!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது