பிக்பாஸ் ஆயிஷாவுக்கு எத்தனை காதலர்கள்? எத்தனை திருமணம்? முன்னாள் காதலர் கூறிய திடுக் தகவல்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷாவின் முன்னாள் காதலர் பேட்டி அளித்திருக்கும் நிலையில் அந்த பேட்டியில் அவர் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முரை திருமணம் ஆகிவிட்டது என்றும் அவருக்கு அடுக்கடுக்காக 5 காதலர்கள் இருந்தார்கள் என்றும் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஆயிஷா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் என்பது தெரிந்ததே. விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள்வந்தாள் என்ற என்ற சீரியலில் நடித்த ஆயிஷா அந்த சீரியலின் இயக்குனருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதிலிருந்து விலகினார்.

அதன் பிறகு அவர் மாயா என்ற சீரியலில் நடித்தார் என்பதும், அந்த சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. அது பின்னர் ’சத்யா’ என்ற சீரியலில் நடித்த பிறகு ஆயிஷா புகழின் உச்சத்துக்கு சென்றார்.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் ஆயிஷா ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி வருகிறார். குறிப்பாக அவர் கடந்த ஞாயிறு அன்று கமல்ஹாசனிடம் நடந்து கொண்ட விதம் பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆயிஷாவின் முன்னாள் காதலர்களில் ஒருவரான தேவ் நமக்கு அளித்த பேட்டியில் என்னுடன் ஆயிஷா 4 வருடங்கள் இருந்தார் என்றும் அவரை சீரியலில் அறிமுகம் செய்ததே நான் தான் என்றும் எங்களுடைய காதல் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தபோது திடீரென சத்யா சீரியல் நாயகன் விஷ்ணு இடையில் வந்ததால் எங்களுக்குள் பிரிவு ஏற்பட்டது என்றும் இப்போது விஷ்ணுவுடன் கூட ஆயிஷா இல்லை என்று நான் கேள்விப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

ஆயிஷாவுக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகிவிட்டது என்றும் அதை மறைத்து தான் என்னுடன் பழகினார் என்றும் இப்போது என்னுடைய தங்கையின் காதலரான யோகேஷை காதலித்து வருவதாகவும் கேள்விப்பட்டேன் என்றும் தேவ் தெரிவித்துள்ளார்.

இரண்டு திருமணம் மற்றும் ஐந்து காதலர்கள் என்று அவருடைய முன்னாள் காதலர் தேவ் கூறியிருப்பது எந்த அளவுக்கு உண்மை என்பது ஆயிஷா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தால் தெரியும்.