பிக்பாஸ் வீட்டில் முதல் பூகம்பம்...திணறும் போட்டியாளர்கள்..அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பூகம்பமாக மூன்று பெரிய டாஸ்க்குகள் வைக்கப்படும் என்றும் அந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றால் மட்டுமே வெளியே இருந்து உள்ளே வரும் வைல்டு கார்டு போட்டியாளர்களை சமாளிக்க முடியும் என்றும் பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.
வெளியே இருந்து உள்ளே மூன்று போட்டியாளர்கள் வர இருப்பதை அடுத்து அவர்களுக்கும் தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே நடக்கும் டாஸ்க்கில் வெளியே இருந்து வந்த போட்டியாளர்கள் வெற்றி பெற்றுவிட்டால் உள்ளே உள்ள போட்டியார்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது முதல் பூகம்ப டாஸ்க் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த டாஸ்க்கை விஷ்ணு மற்றும் தினேஷ் விளையாடுகின்றனர். ஆனால் இருவரும் அந்த டாஸ்க்கில் ஜெயிக்க முடியாமல் திணறி வருவதை பார்த்து மற்ற சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதனை அடுத்து வெளியே இருந்து உள்ளே வரும் போட்டியாளர்கள் இந்த டாஸ்க்கை எப்படி விளையாட போகிறார்கள் என்பதை புரிந்து தான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் முதல் பூகம்பம் டாஸ்க்கில் போட்டியாளர்கள் திணறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments